Advertisement

உடல் எடை கிடுகிடுவென்று குறைக்க உதவும் வெங்காயம்

By: Nagaraj Sun, 03 Sept 2023 4:58:05 PM

உடல் எடை கிடுகிடுவென்று குறைக்க உதவும் வெங்காயம்

சென்னை: ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அனைவரும் பாதிக்கப்படும் ஒரு விஷயமாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு.

இதனால் பலரும் மன கஷ்டத்தில் பாதிக்கப்படுகின்றார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பலவற்றை செய்வார்கள். ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை.

ஆனால் ஒரு சிலருக்கு வீட்டு வைத்தியம் மூலம் உடல் எடையானது குறைவடையும். அதிலும் வெங்காயத்தை வைத்து எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எடையை குறைக்க வெங்காய சாற்றை தொடர்ந்து குடிப்பது ஒன்று. வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாறு தயாரிக்கலாம். இது சத்தானது.

body weight,onion,soup,green chili,garlic ,உடல் எடை, வெங்காயம், சூப், பச்சை மிளகாய், பூண்டு

வெங்காய சூப்பை மதிய உணவு அல்லது இரவு உணவில் குடிக்கலாம். இந்த சூப் நீண்ட நேரம் முழுமையான உணர்வுடன் இருக்க உதவும். இது தவிர பச்சை வெங்காயத்தையும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் உடல் எடையானது குறையும்.

வெங்காய சூப் செய்முறை:
தேவையான பொருட்கள்பெரிய வெங்காயம் – 4பூண்டுப் பற்கள் – 4பச்சை மிளகாய் – 2கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப்வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்மிளகுத் தூள் – ஒரு டீ ஸ்பூன்நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீ ஸ்பூன்சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்கொத்தமல்லித் தழை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை விட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். நன்றாக வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.

கொதித்து வரும் வேளையில் தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கினால் சுவையான வெங்காய சூப் ரெடி! இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

Tags :
|
|