Advertisement

வைட்டமின்கள், கந்தகச்சத்து நிறைந்த வெங்காய்தாள்

By: Nagaraj Sat, 29 Apr 2023 6:56:59 PM

வைட்டமின்கள், கந்தகச்சத்து நிறைந்த வெங்காய்தாள்

சென்னை: நார்ச்சத்துக்கள் நிறைந்தது... வெங்காயத் தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது.

வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

eye disease,good medicine,medicine,onion leaf,prevent cancer , கண்நோய், நல்ல மருந்து, புற்று நோயை தடுக்கும், மருத்துவக்குணம், வெங்காயத்தாள்

வெங்காயப் பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும். இந்த சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வெங்காயப் பூ பசியை தூண்டும். வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன.

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இதில் உள்ள அலிசின் என்னும் வேதிப்பொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. வெங்காயத்தாள் கண்நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.

Tags :