Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உங்களை பற்றிய விமர்சனங்கள் தான் உங்களை வலிமையாக்கும்

உங்களை பற்றிய விமர்சனங்கள் தான் உங்களை வலிமையாக்கும்

By: Karunakaran Sat, 12 Dec 2020 12:03:22 PM

உங்களை பற்றிய விமர்சனங்கள் தான் உங்களை வலிமையாக்கும்

உங்கள் பேச்சையோ, செயலையோ இன்னொருவர் விமர்சிக்கும்போது, உடனடியாக கோபம் வந்துவிடுகிறதா? கோபம் வந்தால், அது விவேகமல்ல! உங்களை நோக்கி வரும் விமர்சனம் என்பது வேகத்தடை போன்றது. அதில் சற்று நிதானித்து கடக்க வேண்டும். ஆனால் நின்று விடக்கூடாது.உங்களை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவேண்டாம். ஏன் என்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும். விவேகமாக்கும்.

உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் உங்களை மன உளைச்சலுக்குள்ளாக்கினாலும் மற்றவர்கள் பார்வையில் நீங்கள் மிக முக்கியமான நபராக மாறிவிட்டீர்கள் என்று கருதவேண்டும். விமர்சனம் என்பது சில நேரங்களில் விமர்சிப்பவரின் இயலாமையை காட்டும். அவரால் முடியாததை நீங்கள் செய்து முடிக்கும்போது நீங்கள் அவரது விமர்சனத்துக்குள்ளாவீர்கள். உங்களை விமர்சிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏதோ ஒருவித மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் அவர்களது விமர்சனம் உங்களுக்கு விளம்பரத்தை தேடித்தருகிறது. உங்களை விமர்சித்து அவர்கள் உங்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

reviews,stronger,hard work,life change ,விமர்சனங்கள், வலுவான, கடின உழைப்பு, வாழ்க்கை மாற்றம்

அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டே இருப்பவர்கள் காலம் முழுக்க விமர்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள். விமர்சிக்கப்படும் நிலைக்கு அவர்களால் உயர முடியாது. குறை சொல்லியே வாழ்ந்து, குறை சொல்லியே மடிந்துபோவார்கள். நன்றாக பூத்து, காய்க்கும் செடிக்கு உரம் இடுவதைப் போன்றதுதான் விமர்சனமும்! அதை உரமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருக்கவேண்டும். வென்னீராக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு சென்றுவிடக்கூடாது.

விமர்சனங்களை நீங்கள் ஒரு கலையாக கருதினால், அதை பற்றிய பயம் உங்களுக்கு போய்விடும். பயம் போய்விடும்போது, யார் விமர்சிக்கிறார்? என்பதை பார்க்காமல், விமர்சிக்கப்படும் கருத்து என்ன? என்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவீர்கள். அப்போது உண்மையான அக்கறையோடு சொல்லப்படும் விமர்சனமா? அல்லது பொறாமையால் கிளப்பப்படும் குமுறலா? என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். உண்மையான அக்கறையுடன் சொல்லும் பயனுள்ள விமர்சனங்களை கேட்டு உங்களையே நீங்கள் திருத்திக்கொள்ளவேண்டும். தேவையற்ற விமர்சனங்கள் என்றால் அப்படியே அதை அலட்சியம் செய்திடவேண்டும்.


Tags :