Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பாரம்பரிய வாழ்வியலை நோக்கி திரும்பும் நம் வாழ்வு முறை

பாரம்பரிய வாழ்வியலை நோக்கி திரும்பும் நம் வாழ்வு முறை

By: Karunakaran Sat, 28 Nov 2020 7:57:24 PM

பாரம்பரிய வாழ்வியலை நோக்கி திரும்பும் நம் வாழ்வு முறை

அணு ஆயுதம் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்கும் பல வல்லரசு நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலால் கலங்கி நிற்கிறது. இதனால் தற்போது பாரம்பரிய வாழ்வியலை நோக்கி திரும்பியது நம் வாழ்வு முறை. கசப்பான மருந்துகளே மிகுந்த நன்மைகள் தரும் என்ற போதிலும் சித்த மருந்துகளை எடுக்க மருத்துவர்கள் இன்று தினமும் கஷாயங்களை தேடி அருந்தும் நிலை. Dengue, swine-flu, கொரோனா போன்ற பேரிடர்களிலிருந்து மக்களை முடிந்தவரை பாதுகாத்தது அலோபதி மற்றும் சித்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையே.

அனைத்து நோய் நிலைகளிலும் ஆங்கில மருத்துவத்தின் நவீன அறிவியலும் சித்த மருத்துவத்தின் தனி மனித நுண்அறிவியலும் இணைக்கப்பட்டு அதற்கான மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து வழங்கும்போது நோயாளிகளுக்கு ஏற்படும் மிக சிறந்த நிவாரணமும் நன்மைகளும் மறைக்கப்படும் உண்மையாகவே உள்ளது. நோயின் வேரை பிடுங்காமல் கிளைகளை வெட்டினாலும் அது வேறு கிளைகளாகவே வளரும். அதுவோ நோயின் இரண்டாம் மூன்றாம் கட்ட நிலைகள். இதை மக்களும் புரிந்து கொள்வதில்லை.

life,traditional life,corona virus,siddha medicine ,வாழ்க்கை, பாரம்பரிய வாழ்க்கை, கொரோனா வைரஸ், சித்த மருத்துவம்

சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவ முறைகளை ஏற்று கொள்ள வேண்டும். ஆங்கில மருத்துவர்கள் சித்த மருந்துகளையும் வாழ்வியல் முறைகளையும் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை முறைகளை அறிந்து மக்களுக்கு தெளிவான ஆலோசனைகளை வழங்கினால் மட்டுமே நமது மருத்துவ சேவை நிறைவடையும். எந்த மருத்துவ முறையானாலும் மக்களின் நோய்களையும், வேதனையயும் தீர்ப்பதே மருத்துவர்களின் கடமை.

ஆங்கில மருத்துவம் போலவே சித்த மருத்து வத்திலும் Siddha orthopedics, Siddha Gynecology, Siddha Pediatrics, Siddha Ophthalmology, Siddha oncology, Siddha Dermatology என அனைத்து துறைகளிலும் வல்லுனர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களும் ஆங்கில மருத்துவர்களும் இணைந்து மக்களுக்கு சிறந்த முழுமையான நீண்ட வாழ்நாள் அளிக்கும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பதே எண்ணற்றவர்களின் கனவு.


Tags :
|