Advertisement

ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் பப்பாளிப் பழம்

By: Nagaraj Sat, 12 Sept 2020 10:01:49 AM

ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் பப்பாளிப் பழம்

பப்பாளிப் பழத்தினை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நமது ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பப்பாளி என்பது ஆப்பிள் போன்று அதிக விலை கொண்ட ஒரு பழம் கிடையாது, மிகவும் மலிவான விலையில் அதிக சத்துகளைக் கொண்ட பழமாகும்.

இது பெரும்பாலும் கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் இலவசமாக கிடைக்கப் பெறும் பழமாகும். பப்பாளியில் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. பப்பாளிப் பழத்தினை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வையில் தெளிவு இருக்கும்.

மேலும் இது பல்லினை வலுவாக்குதல், ஈறுகள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்தல், வயிற்றுப் புண்ணை சரிசெய்தல், மலச்சிக்கல் போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கின்றது.

papaya,honey,hemoglobin,nerve problem ,பப்பாளி, தேன், ஹீமோகுளோபின், நரம்பு பிரச்சினை

மேலும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பப்பாளிப் பழம் சிறந்த தீர்வாக இருந்து வருகின்றது. பெண்களின் மாதவிடாய் போன்ற பிரச்சினைகளுக்கு பப்பாளிப் பழத்தினை மருத்துவர்களே பரிந்துரைப்பர்.

மேலும் குழந்தைகளுக்கு அதனை மிக்சியில் போட்டு அரைத்து கூழ் பதத்திலோ அல்லது ஜூஸ் பதத்திலோ குடிக்கலாம். வாரம் ஒருமுறை பப்பாளிப் பழத்தினை உணவில் எடுத்துக் கொள்வது சிறப்பான விஷயமாகும். பப்பாளியினை பழமாக மட்டுமல்லாது காயாகவும் சாப்பிடலாம், அதாவது பப்பாளிக் காயினை கூட்டு செய்து சாப்பிடுதல், பொரியல், குழம்பு என நாம் சாப்பிடலாம்.

பப்பாளிப் பழத்தினை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நமது ஹீமோகுளோபின் அதிகரிக்கும் என்பது உண்மை.

Tags :
|
|