Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மலச்சிக்கல் பிரச்னைகளை போக்கும் நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு

மலச்சிக்கல் பிரச்னைகளை போக்கும் நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு

By: Nagaraj Thu, 19 Jan 2023 1:23:17 PM

மலச்சிக்கல் பிரச்னைகளை போக்கும் நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு

சென்னை: நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்னைகள் குணமாகும். ஏராளமான மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளது.

உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும். பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து அதிகமாகும்.

பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும். சர்க்கரைநோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங் கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பனங்கிழங்கில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்பு, புரதம், சர்க்கரை, ஒமேகா-3, பொட்டாசியம், வைட்டமின் பி, பி1, வைட்டமின் சி மற்றும் தொகுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத்தந்து, அழகைக் கூட்டுகிறது.

iron,fiber,papaya,blackcurrant,health ,இரும்புச்சத்து, நார்ச்சத்து, பனங்கிழங்கு, கருப்பட்டி, ஆரோக்கியம்

பனங்கிழங்கில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், மலச்சிக்கல் வராது தடுக்கிறது. இதனால், பெருங்குடலில் உண்டாகிற புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் உடல் வலிமை, மூளை வளர்ச்சி, எலும்புகளை பலம் பெறச் செய்தல் ஆகியவற்றிற்கு துணை செய்கிறது.

இதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து இடித்து மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பது பனங்கிழங்குன்னு சொல்லலாம். இந்த கிழங்கை நன்றாக வேகவைத்து, மேல் தோலையும் நடுவிலிருக்கும் சற்று கடினமான குச்சி போன்ற பகுதியையும் நீக்கி விட்டு சாப்பிட வேண்டும்.

வேகவைத்து பனங்கிழங்கை, சிறுசிறு துண்டுகளாக்கி, காயவைத்து, அத்துடன் கருப்பட்டியை சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட உடலுக்கு தேவையான இரும்புச்சத்து எளிதில் கிடைக்கும்.

Tags :
|
|
|