Advertisement

கண் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்

By: Nagaraj Tue, 22 Dec 2020 8:19:14 PM

கண் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்

கண் பார்வை குறையும் போதே அதற்குரிய மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கண் பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கண்ணுக்கும் தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கண்ணுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கண்ணின் பார்வை குறைவு படும்போது கண் மருத்துவரை அணுகி கண்ணாடி போட்டுக் கொள்வது முக்கியமானது.

படுத்துக் கொண்டு படிக்காதீர்கள், பயணத்தின் போது படிக்காதீர்கள், மிக அதிக வெளிச்சம் - மிகக் குறைந்த வெளிச்சம் ஆகிய சூழலில் படிக்காதீர்கள், மிகச் சிறிய எழுத்துரு கொண்ட புத்தகங்களைப் படிக்காதீர்கள், தெளிவான எழுத்துக்களற்ற ஒளியச்சுப் பிரதிகளைப் படிக்காதீர்கள்.

eyesight,to be avoided,weakening,headache ,கண்பார்வை, தவிர்க்க வேண்டும், பலவீனப்படுத்தும், தலைவலி

இவை எல்லாமே கண்ணை அதிக அழுத்தத்திற்குள் தள்ளி தலைவலிக்கு அழைப்பு விடுக்கும். தொலைக்காட்சி பார்க்கும் போதோ, கணினியில் வேலை செய்யும் போதோ அறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும்.

இருட்டு அறையில் இவற்றைச் செய்வது கண்ணை மிகவும் பலவீனப்படுத்தும். அதிக வெளிச்சமானவற்றை நேரடியாய்ப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Tags :