Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலுக்கு நன்மை தரும் மருத்துவக்குணங்கள் நிறைந்த இலந்தைப்பழம்

உடலுக்கு நன்மை தரும் மருத்துவக்குணங்கள் நிறைந்த இலந்தைப்பழம்

By: Nagaraj Mon, 30 Nov 2020 7:35:16 PM

உடலுக்கு நன்மை தரும் மருத்துவக்குணங்கள் நிறைந்த இலந்தைப்பழம்

இலந்தைப்பழம் அதிக நன்மைகளை கொண்டது. இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உளைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.

இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

lentil fruit,vitamins,west bengal,vitamins ,இலந்தை பழம், வைட்டமின்கள், மேற்கு வங்காளம், வைட்டமின்கள்

இலந்தை பழத்தில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது. உடலில் கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். இதனால் லேசாக கீழே விழுந்தாலும் கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும்.

பித்தம் அதிகரித்தால், தலைவலி, மயக்கம், தலைசுற்றல் என பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பித்தத்தை குறைக்க இலந்தைப்பழம் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும். நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

Tags :