Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் மிளகு தண்ணீர்

அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் மிளகு தண்ணீர்

By: Nagaraj Wed, 14 Dec 2022 9:30:20 PM

அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் மிளகு தண்ணீர்

சென்னை: ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கருப்பு மிளகு தூளை கலந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால் எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

தினமும் மிளகு நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். செரிமானமும் மேம்படும். வயிற்று பிரச்சினைகளும் தடுக்கப்படும். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும். செல்கள் சேதமடைவதையும் தடுக்கும்.

பருவகால நோய் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வழிவகை செய்யும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். வெதுவெதுப்பான நீருடன் கருப்பு மிளகு தூள் சேர்த்து பருகி வரலாம். நீர், மிளகு இவை இரண்டும் செரிமானத்தை சீராக்கும்.

black pepper,health,hot water,organic,pepper water , கருப்பு மிளகு, மிளகு தண்ணீர்

அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை பருக ஆரம்பித்தால் உடலில் ‘ஸ்டெமினா’ அளவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். கருப்பு மிளகு வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்கக்கூடியது.


சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தையும், மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும். கீல்வாதம், மூட்டு வலி, மலச்சிக்கல், சுவாசக்கோளாறு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நீரை பருகுவது நல்லது. அதேவேளையில் அதிகம் பருகினால் குடலில் எரிச்சல் ஏற்படக் கூடும்.

Tags :
|