Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கோடைக்கு உகந்தது; நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி வெள்ளரி சாலட்

கோடைக்கு உகந்தது; நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி வெள்ளரி சாலட்

By: Nagaraj Mon, 11 Sept 2023 10:34:53 AM

கோடைக்கு உகந்தது; நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி வெள்ளரி சாலட்

சென்னை: கோடைகாலத்திற்கு உகந்த தர்பூசணி வெள்ளரி பன்னீர் சாலட்... 90 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி ஆகிய பழங்களை கொண்டு சுவையான எளிதில் செய்ய கூடிய சாலட் தயாரித்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்: தர்பூசணி- 100 கிராம், வெள்ளரி - 100 கிராம், புதினா - சிறிதளவு, பனீர் - 50 கிராம், தேன்/ எலுமிச்சை சாறு - விருப்பத்திற்கு ஏற்ப.

delicious,watermelon,cucumber,salad,paneer ,சுவையானது, தர்பூசணி, வெள்ளரி, சாலட், பனீர்.

செய்முறை: பழங்களை கழுவி, தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். சுடு தண்ணீரில் பனீரை 5 நிமிடங்கள் போட்டு வைத்த பின், நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் பழங்களையும் பனீரையும் சேர்த்து கலக்க வேண்டும்.

அடுத்து அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும். கடைசியாக புதினா சேர்த்து, பரிமாறவும் சுவையான தர்பூசணி வெள்ளரி பனீர் சாலட் ரெடி.

Tags :
|