Advertisement

தொப்பையையும் குறைக்கும் அன்னாசிப்பழம்!

By: Monisha Sat, 07 Nov 2020 11:47:03 AM

தொப்பையையும் குறைக்கும் அன்னாசிப்பழம்!

பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழம் ஆகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் 85% நீர்சத்து உள்ளது. பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

அன்னாசி பழத்தில் கொழுப்பு சத்து குறைவாகவும், நார் சத்து அதிகமாகவும் காணப்படுகிறது. இதில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரண கோளாறு, உடல் வீக்கம் போன்றவை ஏற்படாது. தொப்பை கரையும். பெண்கள் எப்போதுமே ஒட்டிய வயிறுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். இளம் பெண்கள் உட்பட அனைவரது தொப்பையையும் குறைக்கும் சக்தி அன்னாசி பழத்திற்கு உண்டு.

இந்த அன்னாசி பழத்தில் கொழுப்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புக்களும் அடங்கியுள்ளது. ஒரு அன்னாசி பழம் சாப்பிட்டால் நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதசத்தை பெற்று விடலாம்.

pineapple,belly,calcium,health,hydration ,அன்னாசிப்பழம்,தொப்பை,கால்சியம்,ஆரோக்கியம்,நீர்சத்து

அன்னாசி பழம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை எரிக்க கூடிய சக்திக் கொண்டது. குறிப்பாக அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் தேங்கியிருக்கும் சதை குறையும். அன்னாசிப் பழத்திற்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. ஆகையால் கர்ப்பிணிகள் இதனை தவிர்க்க வேண்டும்.

ஒரு அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் 4 தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதிலே போட்டு நன்றாக கிளறி, அதனுடன் ஒரு டம்ப்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதனைப் பிழிந்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

Tags :
|
|