Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மாதுளையில் நிறைந்திருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்

மாதுளையில் நிறைந்திருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்

By: Nagaraj Fri, 24 Mar 2023 10:55:06 PM

மாதுளையில் நிறைந்திருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்

சென்னை: மாதுளையில் நிறைந்திருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

மாதுளைப் பழத்தில் அதிகளவு ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தயிர் சாதம் செய்து தருகையில் அதில் மாதுளை முத்துக்களை சேர்த்துத் தந்தால் சுவையாக இருக்கும். விரும்பிச் சாப்பிடுவர். மாதுளைப் பழத்தில் உள்ள துவர்ப்பும் இனிப்பும் உடல் நலத்துக்கு நல்லது.

medicinal properties pomegranate finch,body strength,fruit juice,anemia ,மருத்துவ குணங்கள், மாதுளை பிஞ்சு, உடற்பலம், பழச்சாறு, இரத்தப்பேதி

மாதுளையின் பிற வகையான நன்மைகள்: 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும். பழச்சாற்றை தேவைக்கேற்ப பருகிவர பாண்டு நீங்கி உடற்பலம் தரும்.

இதன் பழஓட்டை நிழலில் காயவைத்து பொடியாக்கி 5-10 கிராம் வீதம் 3 வேளை பொடித்துண்ண பேதி வயிற்றுப்புண் நீங்கும். மாதுளம் பிஞ்சு தளிர் இவைகளை 20 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து பாலில் மூன்று வேளை வீதம் உண்டுவர மேகநோய், வெள்ளைப்படுதல் நிற்கும்.

வாய்ப்புண் குணமாக இதன் தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன குணமாகும். இதன் பழ-ஓட்டைப் பொடித்து அதனுடன் வெந்தயம் பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம் வரை தினமும் 3 வேளை வீதம் உண்டுவர மேகநோய், பாண்டு அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகியவை குணமாகும்.

Tags :