Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மாதுளையால் கர்ப்பிணிகளுக்கு பல நன்மைகள் ஏற்படுமாம்

மாதுளையால் கர்ப்பிணிகளுக்கு பல நன்மைகள் ஏற்படுமாம்

By: vaithegi Thu, 12 Oct 2023 10:07:52 AM

மாதுளையால் கர்ப்பிணிகளுக்கு பல நன்மைகள் ஏற்படுமாம்


மாதுளம் பழங்களில் ஒரு சிறந்த சதவீத அளவிற்கு விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை பொட்டாசியம் விட்டமின் சி, ஈ மற்றும் ஃபோலேட் என்பன. விட்டமின் சி, கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இரும்புச்சத்தைக் கிரகிக்க பெரிதும் உதவுகிறது.கர்ப்பிணிகளுக்கு மாதுளையால் உண்டாகும் நன்மைகள் பல.

ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

1.கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும்.

2.கர்ப்பிணிப் பெண்ணின் கை, கால் மற்றும் பாதப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டிருக்கும்.

3.இவை அனைத்தும் பிரிஎக்லாம்சியா என்னும் பாதிப்பின் அறிகுறிகள். மாதுளையில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ராடிக்கல்கள் இந்த மேற்கூறிய பிரச்சினையை தடை செய்கின்றன.

4.மாதுளம் பழம் உடலின் இரத்த உற்பத்திக்கு உதவுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை சாப்பிடுவது உகந்தது.

5.மாதுளையில் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பே கிடையாது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

6.கர்ப்பிணிப் பெண்களுக்கு,உண்டாகும் தசைப் பிடிப்புகள் பிரச்சனையைச் சரிசெய்து கொள்ள மாதுளை சரியான தீர்வாக உள்ளது.

7.கருவில் வளரும் குழந்தைகளுக்குப் போலிக் சக்து இன்றியமையாதது.

8.இந்த சத்தானது குழந்தையில் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.

9. இந்த சத்தானது கருவில் உள்ள குழந்தைக்கு போதிய அளவு கிடைத்தால் மட்டுமே குழந்தையின் மூளை சம்பந்தப்பட்ட செல்கள் சிறப்பாக வளரும்.

10.மேற்கூறிய போலிக் சத்துக்கள் மாதுளையில் நிறைந்து உள்ளது.எனவே கர்ப்பிணிப் பெண்கள் உண்டு பலன் பெறுங்கள்.

Tags :