இரத்த அழுத்தத்தால் அவதியா... தீர்வுக்கு உதவும் மாதுளை
By: Nagaraj Mon, 06 Mar 2023 10:17:13 AM
சென்னை: இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மாதுளை... இந்தியாவில் மிகவும் பொதுவான பழங்களில் ஒன்று மாதுளை. மற்ற பழங்களைப் போலவே இந்தப் பழத்தையும் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.
வைட்டமின்கள் பி, சி மற்றும் கே, நார்ச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மாதுளையில் உள்ளன. தினமும் மாதுளை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
மாதுளை மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடெண்டுகளைக் கொண்டுள்ளது. இது தமனிகளை சுத்தமாக வைத்திருக்கவும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. இது மட்டுமல்ல. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, இரத்த நாளங்கள் அடைபடுவதையும் மாதுளை தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாதுளை பயனுள்ளதாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் மூன்று மாதுளம் பழங்களை மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளை காணலாம். இது மாதுளை உட்கொள்பவரின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதோடு, இதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும்.
இதயத்தை பலமாக வைத்திருக்க 3 மாதுளைகளை மட்டும் உட்கொண்டால் போதாது. இதனுடன் வாழ்க்கைமுறையில் தேவையான சில மாற்றங்களைச் செய்தால் மட்டுமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மாதுளை உதவும். இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம்.
இது எடையை பராமரிக்கவும், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கவும் உதவும்.