Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பருவமழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பருவமழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

By: Karunakaran Tue, 13 Oct 2020 1:06:22 PM

பருவமழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பருவமழை காலத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியமாகும். மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள். மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.

குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள். மின்சார பெட்டி அருகில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது அதன் அருகில் செல்ல வேண்டாம். மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் அளிக்கவும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காதீர்கள். கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிட வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள்.

precautionary,prevent,electrical accident,monsoon ,முன்னெச்சரிக்கை, தடுப்பு, மின் விபத்து, பருவமழை

கேபிள் டி.வி. ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள். மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். மின்சார தீவிபத்துக்களுக்கான தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்கவும்.

குளியறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தாதீர்கள். சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்கவும். மின் இணைப்புகான கருவிகளை பயன்படுத்தும் போது அவைகளில் பழுதுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள். மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மின்கம்பி அருகே செல்லாதீர்கள். உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளியுங்கள்.

Tags :