Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புற்றுநோயை போக்கும் தன்மை கொண்ட முள் சீத்தாப்பழம்

புற்றுநோயை போக்கும் தன்மை கொண்ட முள் சீத்தாப்பழம்

By: Nagaraj Tue, 24 Jan 2023 10:41:44 PM

புற்றுநோயை போக்கும் தன்மை கொண்ட முள் சீத்தாப்பழம்

சென்னை: உலகை உலுக்கி கொண்டிருக்கும் பல்வேறு நோய்களில் புற்றுநோயும் ஒன்று. எப்படிப்பட்ட தைரியசாலியையும் ஒரு கணம் பதபதக்க வைத்து விடும் ஒரு நோயாகத்தான் இது காணப்படுகின்றது.

இனிமேலும் அந்நோயைக் கண்டு நடுங்க வேண்டிய தேவை இல்லை. அதற்காக தொகை தொகையாக பணத்தினை வாரி செலவு செய்ய வேண்டிய அவசியமும் இனி இல்லை. புற்று நோயின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நிலையை குணப்படுத்திக் கொள்ள இப்போது இயற்கை நமக்கு மருந்தொன்றை கொடையாக கொடுத்திருக்கின்றது.

முள் சீத்தாப்பழத்தை பற்றி தெரியாதவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க முடியாது. புற்று நோயிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை விடவும் சுமார் பத்தாயிரம் மடங்கு பலனை நாம் முள் சீத்தாப்பழத்தின் மூலம் பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கின்றது.

cancer,prickly pear,organs,healing,power ,புற்றுநோய், முள் சீத்தாபழம், உடலுறுப்புகள், குணப்படுத்தும், வல்லமை

வீட்டுத்தோட்டங்களிலும், பழக்கடைகளிலும் பெரிதும் கவனிப்பு இன்றி கிடக்கும் முள் சீத்தாப்பழத்திற்கா இத்தகைய தன்மை இருக்கின்றது என உங்களுக்கு வியப்பாக இருக்கின்றதா? மேற்புறம் முள்போன்ற தோற்றத்தில் காணப்படும் இப்பழத்தின் உட்பகுதி மென்மையான சதைகளால் ஆனது. புற்று நோய் உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் அந்நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்காவில் உள்ள அமேசன் காடுகளை தாயகமாக கொண்ட முள் சீத்தாப்பழம், உடம்பில் புதிய செல்களை உற்பத்தி செய்து, நோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் திறன் கொண்டதாகும். அதிகமான ஊட்டச்சத்தினைக் கொண்டிருக்கும் இப்பழத்தில் காபோஹைதரட், பிரக்டோஸ் மற்றும் விட்டமின் சி என்பன நிறைந்து காணப்படுகின்றன.

கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமையும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது. அத்துடன் புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை கரைத்தல், கற்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்பனவற்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களையும் தடுக்கும் ஆற்றலும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.

Tags :
|
|