Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்

நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்

By: Karunakaran Sat, 21 Nov 2020 9:31:43 PM

நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகின்றனர். ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துகின்றனர். கடந்த 8 மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவதால் காதுகளில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. தினந்தோறும் காதுகளில் பிரச்சினையுடன் 5 முதல் 10 பேர் வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் 8 மணி நேரங்களுக்கு மேல் ‘இயர்போன்’ அணிந்தபடி பணியாற்றுபவர்கள் ஆவர். அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவது காதுகளுக்கு அதிகஅழுத்தத்தை கொடுக்கிறது. சுத்தம் இல்லாத இயர்போட்ஸ், இயர்-பிளக்ஸ்களை பயன்படுத்தும் போது அது காதில் நோய் தொற்றை ஏற்படுத்தும்.

online jobs,earphone,lockdown,long time ,ஆன்லைன் வேலைகள், காதணி, பூட்டுதல், நீண்ட நேரம்

அதிக சத்தம் வைத்து நீண்ட நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவது கேட்கும் திறனை குறைக்கும். இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு நிரந்தர பாதிப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது. தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தாமல் இடைவெளிவிட்டு ‘இயர்போன்‘களை பயன்படுத்த வேண்டும். கணினி மற்றும் மடிக்கணினிகளில் உள்ள ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம்.

பள்ளி மாணவர்கள் 60 டெசிபல் சத்தத்துக்கு மேல் ‘இயர்போன்‘ பயன்படுத்தினால் அது அவர்களின் காதுகளை நேரடியாக பாதிக்கிறது. இதேபோல் சுத்தம் இல்லாத இடங்களில் இயர்போன் உள்ளிட்ட சாதனங்களை வைக்க கூடாது. இயர்போன்களுக்கு பதிலாக ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.


Tags :