Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும் சுண்டைக்காய்

ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும் சுண்டைக்காய்

By: Nagaraj Fri, 29 July 2022 11:08:33 PM

ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும் சுண்டைக்காய்

சென்னை: ரத்தத்தை சுத்தம் செய்யும்... சுண்டைக்காய் குழம்பு, வதக்கல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.


ஜலதோஷம் மற்றும் சளி பிடித்த காலத்தில் சிலருக்கு குரல் கட்டிக்கொண்டு சரியாக பேச முடியாமல் போகிறது. சிலருக்கு வேறு சில காரணங்களால் குரல் வளம் குறைகிறது. இவர்கள் சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் மேம்படும்.

pumpkin,calcium nutrient,firmness,bones,potato ,சுண்டைக்காய், கால்சியம் சத்து, உறுதித்தன்மை, எலும்புகள், வத்தல்

சுண்டைக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.


தினமும் சிறிதளவு சுண்டக்காயை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் நாக்கில் சுவை அறியும் திறன் அதிகரிக்கும். எச்சிலை நன்கு சுரக்க செய்து செரிமானத்தை மேம்படுத்தும். பலர் சுண்டைக்காயை வத்தலாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.


நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது.

Tags :
|