Advertisement

எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த ராகி, பாதாம் பால்

By: Nagaraj Thu, 29 Dec 2022 10:30:27 PM

எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த ராகி, பாதாம் பால்

சென்னை: ராகி, பாதாம் இரண்டிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள எலும்புகள் பலப்படும். உடல் எடை அதிகரிக்கும். மெலிந்த உடல் பருமன் அடையும்.

தேவையான பொருட்கள்
ராகி – 50 கிராம்
பாதாம் – 10
ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்
நாட்டு சர்க்கரை – 50 கிராம்
பால் - 1 கப்

ragi,almonds,sweet potato,milk,cardamom powder ,ராகி, பாதாம், நாட்டுச்சர்க்கரை, பால், ஏலக்காய்தூள்

செய்முறை: முதலில் ராகி, பாதாம் இரண்டையும் முதல் நாள் இரவே தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். பின் மறுநாள் காலையில் ஊற வைத்த ராகி, பாதாம் இரண்டையும் தண்ணீரை வடிகட்டி மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த ராகி, பாதாமை ஒரு வடிகட்டி வைத்து வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் அரைத்து வடிகட்டி வைத்துள்ள ராகி, பாதாம் பாலை அதில் சேர்க்கவும். பாலை சேர்த்தவுடன் கை விடாமல் நன்றாக கிளறவும். ராகி பால் நன்றாக வெந்து கண்ணாடி போன்று கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளறி விடவும்.

ராகி பால் நன்றாக வெந்ததும் 50 கிராம் அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். நாட்டு சர்க்கரை நன்றாக கரையும் வரை கிளறி விடவும். பின்னர் இதில் 1 கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து கொள்ளவும். பால் சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஒரு சிட்டிகை அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்துக் நன்றாக கலந்து விடவும். சுவையான ராகி, பாதாம் பால் ரெடி.

Tags :
|
|