Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஹைப்பர் டென்சனை குறைக்கும் சிவப்பு நிற கொய்யாப்பழம்!

ஹைப்பர் டென்சனை குறைக்கும் சிவப்பு நிற கொய்யாப்பழம்!

By: Monisha Thu, 22 Oct 2020 10:12:47 AM

ஹைப்பர் டென்சனை குறைக்கும் சிவப்பு நிற கொய்யாப்பழம்!

கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் ஒருவகை பழமானது உள் பக்கம் சிவப்பாக இருக்கும்,மற்றொன்று வெள்ளை நிறமாக இருக்கும். இந்த இரண்டு வகை கொய்யா பழமும் நிறத்தில் மட்டுமல்ல அவற்றின் குணத்திலும் வேறுபட்டு காணப்படுகின்றது. இந்த பதிவில் சிவப்பு நிற கொய்யாப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

நீரிழிவு நோய் உடையவர்கள் சிவப்பு நிற கொய்யா பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் டைப்- 2 ம் வகை நீரிழிவு நோய் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யா பழத்தில், கேரட் மற்றும் தக்காளி பழத்தில் இருக்கும் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.

இதில் விட்டமின் A சத்துக்கள் உள்ளதால் நமது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது . எனவே இந்தப் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண்பார்வை பிரச்சனைகள் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது.

guava fruit,health,eyesight,blood pressure,vitamin ,கொய்யா பழம்,ஆரோக்கியம்,கண்பார்வை,ரத்த அழுத்தம்,விட்டமின்

நமது உடம்பில் இருக்கும் பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் பாதுகாக்கும் சக்தி இந்த சிவப்பு கொய்யாப்பழத்திற்கு உள்ளது .

சிவப்பு கொய்யாவில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, நமது வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியைக் குறைத்து, நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது. சிவப்பு கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சிவப்பு கொய்யாப்பழம் சாப்பிடுவதினால் அது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தினை பேலன்ஸ் செய்திடும். அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும், இதனால் ஹைப்பர் டென்சன் குறைந்திடும். கெட்டக்கொழுப்பை குறைப்பதுடன் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது இந்த சிவப்பு கொய்யா.

Tags :
|