Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் வறுத்த பூண்டு

கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் வறுத்த பூண்டு

By: Nagaraj Thu, 15 Sept 2022 11:03:18 PM

கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் வறுத்த பூண்டு

சென்னை: வறுத்த பூண்டு உடலுக்கு சென்ற சில மணி நேரத்தில் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பிறகு கெட்ட கொழுப்புகளை கரைத்து அதை வெளியேற்றும் பணிகளில் விரைவாக செயல்படுகிறது.

தமனிகளை சுத்தம் செய்து இரத்த அளவை சீராக்க உதவுகிறது. இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் தடைபடாமல் இதயத்துக்கும் உடல் முழுவதும் துடிப்பாக செல்கிறது. இதனால் இதயமும் பாதுகாக்கப்படுகிறது.

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப்பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.

preservative,ring,roasted garlic,blood,bacteria ,பாதுகாப்பு, வளையம், வறுத்த பூண்டு, இரத்தம், பாக்டீரியா

பூண்டுபற்கள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை கட்டுப்படுத்தப்படும்.


வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும். உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும். மணி நேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

Tags :
|
|