Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரோஜாப்பூவே... ரோஜாப்பூவே... மருத்துவக்குணம் நிறைந்த ரோஜாப்பூவே!

ரோஜாப்பூவே... ரோஜாப்பூவே... மருத்துவக்குணம் நிறைந்த ரோஜாப்பூவே!

By: Nagaraj Fri, 10 Nov 2023 11:14:14 PM

ரோஜாப்பூவே... ரோஜாப்பூவே... மருத்துவக்குணம் நிறைந்த ரோஜாப்பூவே!

சென்னை: ரோஜாப்பூவின் மகிமைகளை பட்டியல் போட்டாலும் கூறமுடியாது. அந்தளவிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியது. ரோஜாப்பூவின் சில குணாதிசயங்களை பார்ப்போமா!

ரோஜாப்பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையினுள் ஏற்படும் ரத்த போக்கை நிறுத்தும்.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ளுங்க... அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கலா... அப்படின்னா... என்று கேட்பீர்கள். அந்தளவிற்கு மலச்சிக்கலை நீக்கும் தன்மை கொண்டது.

bile,medicine,rose,sugar,curd ,பித்தம், மருத்துவக்குணம், ரோஜா, சர்க்கரை, கெட்டித் தயிர்

நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும். ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்க... அதை ஆய்ந்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து வர வேண்டும்.

இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரணமாகக் குணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி மற்றும் பித்தக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும் தேவையெனில் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் ஏழு நாட்களில் பித்தம் அறவே நீங்கி விடும்.

Tags :
|
|
|