Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் கம்பு!

வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் கம்பு!

By: Monisha Tue, 08 Dec 2020 09:33:53 AM

வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் கம்பு!

உணவுச்சத்து தரத்தில் கம்பு தானியம் முதலிடம் வகிக்கிறது. ஏன்னெனில், கம்பில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து என பல உயிர்ச்சத்துகள் இருப்பதே காரணம். தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

rye grain,vitamin,protein,calcium,phosphorus ,கம்பு தானியம்,வைட்டமின்,புரதம், கால்சியம், பாஸ்பரம்

கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும். அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள்.

அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.

Tags :