Advertisement

உடல் எடை குறைய சப்ஜா விதை பெரும் பங்கு வகிக்கிறது

By: Nagaraj Sun, 16 Oct 2022 09:38:20 AM

உடல் எடை குறைய சப்ஜா விதை பெரும் பங்கு வகிக்கிறது

சென்னை: கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள சப்ஜா விதைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பவை. துளசி செடி வகை குடும்பத்தை சார்ந்த திருநீற்று பச்சிலை தாவரத்தின் விதை தான் சப்ஜா விதை. இது சியா விதைகளைப் போலவே தோற்றமளிக்கும் ஆனால் இதன் விதை அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.

சப்ஜா விதையில் நமது உடலுக்கு தேவையான கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் இதில் கலோரிகள் இல்லை. சப்ஜா விதையை பச்சையாக சாப்பிட முடியாது, இது மிகவும் கடினமானதாக இருக்கும். சப்ஜா விதைகள் ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

சப்ஜா விதை உடல் எடை குறைய பெரும் பங்குவகிக்கிறது. சப்ஜா விதைகளில் புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் உங்கள் செரிமான அமைப்பில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். இது தேவையற்ற பசியைக் குறைக்க உதவுகின்றன. இது உங்களை நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கிறது. இதனால் அடிக்கடி சாப்பிட தோன்றும் பிரச்சனை இருக்காது.

சப்ஜா விதைகள் சிறந்த நீரிழிவு எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பாட்டிற்கு முன்பு சப்ஜா விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.

sabja seeds,health,wellness,daily diet,relief ,சப்ஜா விதைகள், ஆரோக்கியம், உடல் நலன், அன்றாட உணவு, நிவாரணம்

சப்ஜா விதைகள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான கனிமங்களின் வளமான ஆதாரமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

சப்ஜா விதைகள் கோடையில் ஒரு சிறந்த நீர் ஆதாரமாகும், ஏனெனில் அவை குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. இந்த விதைகள் வயிற்று வெப்பத்தை தணிக்கும். இதை சாப்பிடுவதனால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

சப்ஜா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த விதைகளை நமது உணவில் நல்ல அளவு தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளும்போது, அது தண்ணீரை உறிஞ்சி, நமது குடலுக்கு தண்ணீரை இழுக்க உதவுகிறது. இது மலத்தை மென்மையாக்குகிறது மற்றும் தினசரி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் சப்ஜாவை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மிகப்பெரிய நிவாரணம் பெற முடியும்.

Tags :
|