Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அறிந்துகொள்ளவோம்...சர்க்கரை நோயை குணப்படுத்தும் எளிய உணவுகள்!!

அறிந்துகொள்ளவோம்...சர்க்கரை நோயை குணப்படுத்தும் எளிய உணவுகள்!!

By: Monisha Sat, 22 Aug 2020 3:57:07 PM

அறிந்துகொள்ளவோம்...சர்க்கரை நோயை குணப்படுத்தும் எளிய உணவுகள்!!

சர்க்கரை வியாதி என்பது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி இன்சுலினை சுரக்க வைக்கின்றது. இந்த இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படும். இந்த சர்க்கரை நோயை குணப்படுத்தும் எளிய உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் நெய்விட்டு வதக்கி பொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம்.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாகவோ அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

diabetes,drumstick spinach,onion,bitter gourd,dill ,சர்க்கரை வியாதி,முருங்கைக் கீரை,வெங்காயம்,பாகற்காய்,வெந்தயம்

பாகற்காயில் இன்சுலின் போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது, இதை சாப்பிடுவதால் பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.

சர்க்கரை நோயாளிகள், பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

Tags :
|