Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முதுகு வலியை குணமாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்

முதுகு வலியை குணமாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்

By: Nagaraj Fri, 23 Sept 2022 10:18:46 PM

முதுகு வலியை குணமாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்

சென்னை: நாம் முதுகு வலியை சாதாரணமாக எண்ணி புறக்கணிக்க கூடாது, அதற்க்கு தகுந்த சிகிச்சையை வீட்டிலேயே செய்து பார்க்கலாம், முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள் உள்ளன, இது மருந்து உட்கொள்வதைக் குறைத்து அல்லது உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் பலனை அளிக்க உதவும்.

முதுகு வலிக்கு தமிழ் மருத்துவத்தில் சிறந்த பலன்களை பெற முடியும். அதற்க்கு, உணவு கட்டுபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிக எண்ணெயில் வறுத்த தின்பண்டங்கள், அதிக காரம் கொண்ட மசாலா பொருட்கள், அதிக புளிப்பு, கிழங்கு வகைகள், பொறித்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

back pain,healing,ginger,tea,use ,முதுகு வலி, குணமடையும், இஞ்சி, தேநீர், பயன்படுத்துவதும்

குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உங்கள் முதுகில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். பின்னர், வெந்நீரில் குளிக்கவும். ஆமணக்கு எண்ணெயை (விளக்கெண்ணெய்) சூடாக்கி, உங்கள் முதுகில் மசாஜ் செய்யவேண்டும். அதை இரவு முழுவதும் அப்படியே விடவும்.

வீட்டில் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சியைச் சேர்த்து தயாரிக்கவும், இது முதுகுவலியின் வாய்ப்புகளைக் குறைக்க உதவும். உங்கள் முதுகில் மசாஜ் செய்ய மூலிகை எண்ணெயைப் பயன்படுத்துவதும் விரைவாக முதுகு வலி குணமடைய வழிவகை செய்யும்.

Tags :
|
|