Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தொடைகள் பருமன் இளைக்க எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

தொடைகள் பருமன் இளைக்க எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Fri, 10 Nov 2023 11:13:34 PM

தொடைகள் பருமன் இளைக்க எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

சென்னை: பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தடிமனான தொடைகள் ஆகும். தடிமனான தொடைகளால் ஏற்படும் பிரச்சினைகள் அது இருப்பவர்களால் மட்டுமே உணர முடியும். இப்பிரச்சனை உள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

தொடையின் கொழுப்பை மட்டும் குறைப்பது என்பது நடக்காத காரியமாகும். எடைக்குறைப்பு என்பது ஒட்டுமொத்தமாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சியானது உங்கள் உடலின் ஒட்டுமொத்த கொழுப்பை சரியான முறையில் குறைக்க உதவுமே தவிர குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொழுப்பை யாராலும் குறைக்க முடியாது.

ஆனால் ஒட்டுமொத்த எடை இழப்புடன் உங்கள் தொடைகளை சரியான வடிவத்துடன் மாற்ற ஒரு சில வழிகள் உள்ளது.அது என்ன என்பதைத்தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

bananas,yogurt,green vegetables,foods,electrolytes ,வாழைப்பழங்கள், தயிர், பச்சைக்காய்கறி, உணவுகள், எலக்ட்ரோலைட்டுகள்

கூடுதல் உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உங்கள் உடல் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். இது உடலில் வீக்கத்தை உண்டாக்கும். மேலும் இது உங்கள் தொடைகள் உட்பட உடலின் வடிவத்தையே மாற்றிவிடும். ஆகவே குறைந்த அளவு உப்பு உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் தொடை சதை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

அதிக எலக்ட்ரோலைட்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களே எலக்ட்ரோலைட்டுகள் என அழைக்கப்படுகிறது. உங்கள் உடலில் எலக்ட்ரோலைட் அதிகமாக இருந்தால், உப்பு குறைவாகவே இருக்கும்.

வாழைப்பழங்கள், தயிர் மற்றும் பச்சை காய்கறிகளில் பல்வேறு வகையான எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது.ஆகவே இவ்வகை உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.

Tags :
|
|