Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஹெல்த்தியான தூக்கத்துக்கு எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

ஹெல்த்தியான தூக்கத்துக்கு எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Tue, 28 June 2022 4:06:54 PM

ஹெல்த்தியான தூக்கத்துக்கு எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

சென்னை: தூக்கம்தான் ஒருவரை மறுநாள் உற்சாகமாக ஓடவைக்கும் மாமருந்து. தூக்கம் ஒருவரது வாழ்க்கைத் தரத்தையே மேம்படுத்தும். ஹெல்த்தி தூக்கத்துக்கான எளிய வழிமுறைகள்.

இரவு தூக்கம்தான் நல்லது. பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்குத் தூங்கலாம். ஆனால், நீண்ட நேரம் தூங்கக் கூடாது. பகலில் தூக்கம் வரும்போது, சிறிய நடை செல்லுங்கள்; ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள்; உங்களுக்குப் பிடித்தமானவருக்கு போன் செய்து பேசுங்கள். பகல் தூக்கத்தைத் தவிர்த்தாலே, இரவில் நல்ல தூக்கம் வரும்.

அதிகத் தடிமன் உள்ள தலையணையும் வேண்டாம்; மிகவும் மென்மையான தலையணையும் வேண்டாம். மிதமான தடிமன் உள்ள, பருத்தியாலான தலையணைகளைத் தேர்ந்தெடுங்கள். தலையணை உறையை அடிக்கடி மாற்றுங்கள். படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்கட்டும்.

sleep,backache,pillow,computer,bed,electronic screen ,தூக்கம், முதுகுவலி, தலையணை, கம்ப்யூட்டர், படுக்கை, எலெக்ட்ரானிக் திரை

இரவு மிதமான, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவுக்குப் பின்னர் காபி, டீ, சாக்லேட் அறவே வேண்டாம். இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும். மூளையைப் பாதிக்கும். உடற்பயிற்சி செய்யும்போது, உடல் முழுவதும் சோர்வு அடையும். அது நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

எலெக்ட்ரானிக் திரைகளில் இருந்து வெளியேறும் நீலவண்ண ஒளி, உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும் இயல்புடையது. எனவே, தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே, டி.வி., கம்ப்யூட்டர், டேப்லெட், செல்போனை அணைத்துவிட வேண்டும். படுக்கை என்பது தூங்க மட்டுமே என்கிற கொள்கையைப் பின்பற்றுங்கள். படுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்ப்பது, குழந்தையின் ஹோம்வொர்க் செய்வது, டி.வி பார்ப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முதுகுவலி உள்ளவர்கள், காலுக்கு இடையே தலையணையை வைத்துத் தூங்க முயற்சிக்கலாம். இதனால், முதுகுவலியால் தூக்கம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். கழுத்தை சரியான நிலையில் வைத்துத் தூங்கவேண்டியது அவசியம். படுத்துக்கொண்டு டி.வி பார்க்கக் கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும். முடிந்தவரை படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க வேண்டாம்.

Tags :
|
|
|