Advertisement

தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ் உங்களுக்காக!!!

By: Nagaraj Fri, 14 Oct 2022 09:12:21 AM

தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ் உங்களுக்காக!!!

சென்னை: தொப்பையைக் குறைக்க சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக. இது உங்களுக்கு நிச்சயம் உதவும்.

கிரீன் டீ: கிரீன் டீயில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் பொருள் உள்ளது. எனவே தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் கிரீன் டீயை காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸ்: இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் ஒரு சிறந்த டயட் உணவு என்றும் கூறலாம். எனவே, இதனை உணவில் சேர்த்துக் கொள்வதனால் தொப்பையைக் குறைக்கலாம்.

பீன்ஸ்: பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

காய்கறிகள்: காய்கறிகளில் காளிப்ளசர் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை கொழுப்புகளை குறைக்கவும் உதவும். எனவே தொப்பையை எளிதாக குறைக்கலாம்.

பூண்டு: பூண்டு உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கொழுப்பையும் குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே, பூண்டு சாப்பிடுவதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம்.

ginger,bark,fats,spices,apple,garlic ,இஞ்சி, பட்டை, கொழுப்புகள், மசாலாப் பொருட்கள், ஆப்பிள், பூண்டு

ஆப்பிள்: ஆப்பிளில் உள்ள ஒரு வகையான சத்து உடலுக்கு தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும் தன்மை உடையது. எனவே, தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக தொப்பையை குறைக்கலாம்.


பட்டை: பட்டை என்பது மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். பட்டைப் பொடியை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

இஞ்சி: இஞ்சி நாம் உணவில் சேரப்பதனால் தேவையற்ற கொழுப்புக்கள் 20 சதவீதம் வரை குறைக்கலாம். எனவே, தொப்பையை எளிதாகக் குறைக்கலாம். அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது.

Tags :
|
|
|
|
|