Advertisement

தொண்டை வலியை போக்க எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 11 June 2022 09:39:23 AM

தொண்டை வலியை போக்க எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

சென்னை: தொண்டை வலிக்கு எளிய மருந்து... எலுமிச்சை சாறு, கருப்பு மிளகு மற்றும் உப்பு ஆகியவை மூலிகை மருந்துகள். உங்களுக்கு தொண்டை வலி இருந்தால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து வாய் கொப்பளித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

அதே போல் தொண்டை கரகரப்பு இருந்தால், வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க, உடனே நிவாரணம் கிடைக்கும். சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு வாய் கொப்பளிக்க முடியாமல் போனால், இந்த உப்பு கலந்த தண்ணீரை மெதுவாக குடிக்க வைக்கலாம். இதுவும் நல்ல நிவாரணம் தருகிறது.

இயற்கை மருத்துவத்தில் கருப்பு மிளகும் சளைத்ததல்ல. உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் கருப்பு மிளகு என்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும். ஆம், கருப்பு மிளகு தான் உலகம் முழுவதும் அதிகம் உட்கொள்ளப்படும் மசாலா பொருள் என கூறப்படுகின்றது. மிளகின் பிரபலத்திற்கு காரணம், இதில் சுவையுடன் அதிக ஆரோக்கியமும் இருப்பதுதான். அந்த காலத்து மக்கள் சுவையுடன் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

relief,cold,flu,symptoms,hot water,lemon ,நிவாரணம், சளி, காய்ச்சல், அறிகுறிகள், வெந்நீர், எலுமிச்சம்பழம்

அதிகரித்து வரும் உங்கள் எடையை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது உடல் பருமனை குறைக்க வேண்டும் என்றால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கலவையை உட்கொள்ளலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் நான்கில் ஒரு பங்கு தேக்கரண்டி கருப்பு மிளகு தூள், இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குடிக்கவும். உடல் பருமன் நன்றாக குறையும்.

குமட்டல்: வயிற்றுப்போக்கு, அஜீரணம் அல்லது வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளால், மோசமான மனநிலையும் உடல் நிலையும் பாதிக்கப்படுவதுண்டு. இதனால் வாந்தி வருவது போன்ற உணர்வு, குமட்டல் உணர்வும் ஏற்படும். இதைத் தவிர்க்க, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து, கால் ஸ்பூன் கருமிளகையும் கலந்து பருகவும்.

சளி மற்றும் காய்ச்சல்: சளி பிடித்தாலும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் இந்த மூன்று பொருட்களையும் உட்கொள்வதன் மூலம் நோயை விரைவில் கட்டுப்படுத்தலாம். இதற்கு, ஒரு கிளாஸ் வெந்நீரில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழ விழுதையும் போடவும். 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு, மெதுவாக குடிக்கவும். நிவாரணம் கிடைக்கும் வரை இதை உட்கொள்ளலாம்.

Tags :
|
|
|