Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சியாக உள்ள ஸ்கிப்பிங்

பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சியாக உள்ள ஸ்கிப்பிங்

By: Karunakaran Fri, 18 Sept 2020 3:06:54 PM

பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சியாக உள்ள ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் ஒரு விளையாட்டு பயிற்சியாக மட்டுமல்லாமல் இது விளையாடும் போது உடலில் பலவிதமான நன்மைகள் நடைபெறுகின்றன தெரியுமா? உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சியாக ஸ்கிப்பிங் அல்லது கயிறு தாண்டும் பயிற்சி உள்ளது. ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும். மனக்கவலை, மன அழுத்தம், போன்றவை குறையும்.

தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும். ஸ்கிப்பிங் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். மேலும் கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படலாம். இந்த பயிற்சியை நீங்கள் தினமும் செய்தால் உடல் எடை எளிதில் குறைந்து, உடலுக்கு சீரான வளர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

skipping,exercise,weight loss,childrens ,ஸ்கிப்பிங், உடற்பயிற்சி, எடை இழப்பு, குழந்தைகள்

ஸ்கிப்பிங் செய்யும் போது ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை நம்முடைய உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நீளமுள்ள கயிற்றை தேர்தெடுக்க கயிற்றின் நடுப்பகுதியில் வைத்து கால்களை உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு. ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோல அதிக கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது.

இதய நோயாளிகள், முழங்கால் வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி, எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் அனைவரும் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம். மேலும் அதிக உயரம் கொண்டவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. தினமும் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, உடலில் இருக்கும் நச்சுப்பொருட்கள் எளிமையாக வெளியேற்றிவிடும்.

Tags :