Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குறட்டை எல்லாம் ஒரு பிரச்னையா... எளிய தீர்வு உங்களுக்காக

குறட்டை எல்லாம் ஒரு பிரச்னையா... எளிய தீர்வு உங்களுக்காக

By: Nagaraj Wed, 08 June 2022 5:06:54 PM

குறட்டை எல்லாம் ஒரு பிரச்னையா... எளிய தீர்வு உங்களுக்காக

சென்னை: குறட்டை பிரச்சினையை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியங்கள் இருக்கு. சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறட்டையில் இருந்து விடுபட வழிவகுக்கும். குறட்டை, தூக்கக்கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

தூங்கும்போது, கழுத்து தசைகள் இலகுவாகும். அப்போது மூக்கு, தொண்டை பாதை குறுகியதாக மாறும். அதனால் காற்று நுரையீரலுக்குள் செல்வது சிரமமாகும். மேலும் திசுக்கள் அதிர்வுக்குள்ளாகும். குறட்டை விடும்போதுதான் இந்த பிரச்சினைகள் உண்டாகும்.

சோயா: குறட்டை பிரச்சினை இருப்பவர்கள் பால் பொருட்களை உட்கொள்வது நல்லதல்ல. பசுவின் பால், பாலாடைக்கட்டி போன்றவை கபத்தை அதிகரிக்கும். இதனால் இரவில் குறட்டை பிரச்சினையும் அதிகமாகும். பால் பொருட்களுக்கு மாற்றாக சோயா பால் உள்ளிட்ட பிற சோயா பொருட்களை உட்கொள்ளலாம். அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு குறட்டையையும் குறைக்கும்.

snoring,simple remedy,remedy,marigold tea,garlic,anti ,குறட்டை, எளிய வழிமுறை, தீர்வு, சாமந்தி டீ, பூண்டு, எதிர்ப்பு

தண்ணீர்: தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது சளியை போக்கும். மார்புக்கும் இதமளிக்கும். சளி உருவாகுவதை தடுக்க உடலில் எப்போதும் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பருகினால் மார்புக்கு இதமளித்து குறட்டை பிரச்சினையில் இருந்து விடுபடவும் உதவும். தூக்கம்: போதுமான நேரம் தூங்குவதும் குறட்டையை தவிர்க்க உதவும். உடலும், உள்ளமும் உற்சாகமாக இல்லாவிட்டால் தொண்டை, நாக்கு தசைகள் இறுக்கமடைந்து விடக்கூடும். அதனாலும் குறட்டை உருவாகிவிடும்.

தினமும் 7 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதில் சிக்கல் இருந்தால் குறட்டை பிரச்சினையும் தலைதூக்கிவிடும்.

பாதாம்: மெலடோனின் நிறைந்த உணவுகள் குறட்டையை குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மெலடோனின் என்பது அடிப்படையில் ஒரு ஹார்மோனாகும். பாதாம், கிவி, செர்ரி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் இந்த ஹார்மோன் நிறைந்திருக்கிறது. அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது குறட்டையில் இருந்து விடுபட உதவும்.

snoring,simple remedy,remedy,marigold tea,garlic,anti ,குறட்டை, எளிய வழிமுறை, தீர்வு, சாமந்தி டீ, பூண்டு, எதிர்ப்பு

பூண்டு: சூடான உணவுகள் குறட்டையை குறைக்க உதவும். பூண்டுவை வறுத்து சூடாக சாப்பிடுவது சளியை போக்கவும், அது உருவாகுவதைத் தடுக்கவும் உதவும். பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. பூண்டின் ருசி நாக்குக்கும் விருந்து படைக்கும். அதன் வாச னையும் நிறைய பேருக்கு பிடிக்கும்.

சாமந்தி டீ: சாமந்தி டீயில் ஆல்பா பிசபோலோல் மற்றும் டைமசோலின் ஆகிய அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. இவை குறட்டையை குறைக்க உதவும். காலையிலோ அல்லது மாலையிலோ சூடாக சாமந்தி டீ பருகலாம்.

Tags :
|
|