Advertisement

தேனுக்கும் வெங்காயத்துக்கும் இவ்வளவு நன்மைகளா

By: vaithegi Sun, 19 Nov 2023 09:58:31 AM

தேனுக்கும் வெங்காயத்துக்கும் இவ்வளவு நன்மைகளா


வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும். சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும். வெட்டுக்காயம் உள்ள இடத்தில் வெங்காயத்தை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

தேனை உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு. நல்ல உறக்கமும் ஏற்படுகிறது. வாய்வுத் தொல்லையில் இருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, ஒருவித புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.

honey,onion ,தேன் ,வெங்காயம்


1.பொதுவாக தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப்-ஐ குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் .

2.வெங்காயம் ஒரு சிறந்த மருத்துவ உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது

3.வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, அதை தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்குமென்று சாப்பிட நம் ஆரோக்கியம் சிறக்கும்

4.வெங்காயத்தின் முழு பலனும் கிடைக்க 1 கப்பில் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

5.மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை குடித்து வந்தால் , இது காய்ச்சலை போக்கும்.தூக்கமின்மை கோளாறை சரி செய்யும்.

6.இந்த வெங்காய சிரப் கொலஸ்ட்ரால் குறைக்க உதவும். நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும். செரிமானத்தை ஊக்கவிக்கும்.

7.இந்த வெங்காய சிரப்ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் – தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன.

8.வெங்காய சிரப் இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சிரப்பை 1 டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.

9.சளித்தொல்லைஇருந்தால் முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது 1 டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும்.

10. இந்த ஆரோக்கியம் தரும் வெங்காய சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் 1 மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது.

Tags :
|