Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பால் குடிப்பதால் ஏற்படும் சில பிரச்னைகள்... நிபுணர்கள் கருத்து

பால் குடிப்பதால் ஏற்படும் சில பிரச்னைகள்... நிபுணர்கள் கருத்து

By: Nagaraj Sat, 03 Sept 2022 10:10:05 AM

பால் குடிப்பதால் ஏற்படும் சில பிரச்னைகள்... நிபுணர்கள் கருத்து

சென்னை: பால் குடிப்பதால் பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக தற்போது நிபுணர்கள் தரப்பில் கூறுகின்றனர். பாலில் நாம் சேர்க்கும் பொருள்களால் பல பிரச்னைகள் உருவாகின்றன. சுவைக்காக சில ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

பொதுவாக அதிக சர்க்கரை உள்ள உணவுகள் கூடுதல் ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்குப் பதில் கூடுதல் கலோரிகளை வழங்குகின்றன. நாம் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்த்து பால் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்குத் தீமைகளைத் தரும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பாலுடன் சர்க்கரையைக் கலப்பதைத் தவிர்க்க நிபுணர்கள் கூறும் சில காரணங்கள்.

milk,constipation,indigestion,refined sugar,experts ,பால், மலச்சிக்கல், அஜீரணம், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நிபுணர்கள்

செரிமான பிரச்னை: பால் மற்றும் சர்க்கரை கலவை செரிமானத்தைப் பாதிக்கும். அதேபோ, அசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பைல்ஸ் போன்ற சிக்கல்களைத் தூண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக, லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நிலையில் ஒருவர் பாலுடன் வெள்ளை சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பது குறிப்பிட்ட நபருக்குச் செரிமானத்தை மிகவும் கடினமாக்குகிறது மற்றும் அவரின் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

தூங்கச் செல்லும் முன் வெள்ளை சர்க்கரை கலந்த பாலை எடுத்துக் கொள்வது சிலருக்கு அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம்.

கல்லீரல் பிரச்னை: ஒரு டேபிள் ஸ்பூன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் சுமார் 60 கலோரிகள் உள்ளது. 1 கிளாஸ் ஃபுல் க்ரீம் பாலில் சுமார் 89 கலோரிகள் உள்ளன. இந்த நிலையில் வெதுவெதுப்பான பாலுடன் வெள்ளை சர்க்கரையைக் கலந்து குடிப்பது கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தை அதிகமாகக் கொண்ட பானமாக இருக்கும். எனவே இப்பழக்கம் கல்லீரலின் மேற்பரப்பில் கொழுப்பு மூலக்கூறுகள் படிய வழிவகுத்து கல்லீரல் பிரச்னையை உருவாக்கும்.

Tags :
|