Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் நலக்கோளாறுகளை நிவர்த்தி செய்யும் சில மருத்துவக்குறிப்புகள்

உடல் நலக்கோளாறுகளை நிவர்த்தி செய்யும் சில மருத்துவக்குறிப்புகள்

By: Nagaraj Thu, 24 Nov 2022 3:35:52 PM

உடல் நலக்கோளாறுகளை நிவர்த்தி செய்யும் சில மருத்துவக்குறிப்புகள்

சென்னை:நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடுகிறது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில எளிமையான சித்து மருத்துவக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.


அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

வாயு தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

மலச்சிக்கல்: செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

sugar,milk,sugar,medicinal notes,themel,white garlic ,சுக்கு, பால், சர்க்கரை, மருத்துவக்குறிப்புகள், தேமல், வெள்ளை பூண்டு

மூச்சுப்பிடிப்பு: கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சருமநோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்: வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூக்கடைப்பு: ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

Tags :
|
|
|
|