Advertisement

அழகிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் சில டிப்ஸ்

By: Nagaraj Mon, 24 July 2023 11:05:29 PM

அழகிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் சில டிப்ஸ்

சென்னை: மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும்.

முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல் படர்ந்தால் மருதோன்றி இலையை அரைத்து வைத்துக் கொண்டு, அதனுடன் சின்னத்துண்டு சவுக்காரம் சேர்த்துப் பிசைந்து தொடர்ந்து பூசிக் கொண்டு வந்தால் கறுந்தேமல் நிறம் மாறி விடும். உடம்பில் பருமன் ஏற முக்கிய காரணம் இரவுச்சாப்பாடு தான். இரவுச் சாப்பாட்டை லேசாக்கி கொள்ளுங்கள். அல்லது விலக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்மாக உடல் எடை குறைந்து வருவீர்கள்.

fatigue,lemon peel,relieves,rock salt,suku,vomiting ,எலுமிச்சம்பழத்தோல், கல் உப்பு, சுக்கு, சோர்வு, நீங்கும், வாந்தி

உங்கள் கை நகம் பார்க்கச் சிறிதாகவும், விகாரமாகவும் இருந்தால் மூன்று நான்கு நாள் அவற்றின் மீது ஸ்பிரிட் பூசி வரவும், அவை அழகாகவும் பெரிதாகவும் வளரும். எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளணும். தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து பல்துலக்கி வரணும். பல் பளபளவென்று ஆவதோடு வாய் நாற்றமும் நீங்கி விடும்.

சுக்கையும், கல் உப்பையும் சம அளவு பொடி செய்து காலை இரவு உணவோடு கலந்து கொண்டால் வாந்தி, சோர்வு, ஆகியவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

Tags :
|