Advertisement

வியர்வை நாற்றத்தை தவிர்க்க சில வழிகள்!

By: Monisha Thu, 05 Nov 2020 11:53:50 AM

வியர்வை நாற்றத்தை தவிர்க்க சில வழிகள்!

நாம் ஒவ்வொருவரின் உடல் வாசனை இயற்கையானது. இது பொதுவாக வியர்வையால் ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் இது மிகவும் கடுமையான நிலையை அடைகிறது. இந்த பதிவில் வியர்வை நாற்றத்தை தவிர்க்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

டீ ட்ரீ அல்லது லேவெண்டர் இந்த இரண்டில் ஏதேனும் ஒரு ஆயிலில் சில துளிகள் ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். தினம் இரண்டு முறை இதை உபயோகிப்பதால் வியர்வை நாற்றம் குறையும்.

அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கும்போது ஒரு பக்கெட் தண்ணீரில் 1 ஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். இது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையை கசக்கி குளிக்கும் தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.

அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி-பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். இதை குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்டி பாக்டீரியல் டஸ்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

sweat,odor,lavender oil,chlorophyll,tomato ,வியர்வை,நாற்றம்,லேவெண்டர் ஆயில்,க்ளோரோஃபில்,தக்காளி

உணவு பழக்கம் கூட ஒருவரின் உடல் நாற்றத்திற்கு காரணமாகலாம். பூண்டு, சிலவகை அசைவ உணவுகள் மற்றும் அதிக மசாலா சேர்ந்த உணவுகள் இதற்கு உதாரணமாகும். காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தை போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சாப்பிட வேண்டும்.

குளிக்கும் தண்ணீரில் வெட்டிவேரை சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் உடல் நாற்றம் நீங்கி உடல் மணக்கும். 2 ஸ்பூன் பட்டைத்தூள் மற்றும் அரைமூடி எலுமிச்சை சாறு இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால் உடல் வலியும், நாற்றமும் பறந்து போகும்.

நன்றாக பழுத்த நாட்டுத் தக்காளி பழத்தை மிக்சியில் அடித்து அக்குளில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் நாள் முழுக்க வியர்வை வாடை இல்லாமல் மகிழ்ச்சியாக உலாவரலாம். ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

Tags :
|
|