Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய்களை தீர்க்கும் மகத்துவம் கொண்ட மணத்தக்காளி கீரை

நோய்களை தீர்க்கும் மகத்துவம் கொண்ட மணத்தக்காளி கீரை

By: Nagaraj Mon, 31 Aug 2020 08:27:00 AM

நோய்களை தீர்க்கும் மகத்துவம் கொண்ட மணத்தக்காளி கீரை

மணத்தக்காளியில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கி உள்ளன. இவை பல்வேறு நோய்களை தீர்க்கும் மகத்துவம் கொண்டவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மணத்தக்காளியை மிளகு தக்காளி என வேறு பெயரிலும் சொல்வதுண்டு. இதில் கருப்பு சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இலை, காய், பழம் என அனைத்தும் மருத்துவ பயனுடையது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், கணை சூடு, இருமல் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

lemongrass,blood cells,ulcer,healing,flatulence ,
மணத்தக்காளி, இரத்த அணுக்கள், அல்சர், குணமாகும், வாய்வு

மணத்தக்காளி வற்றலை நெய்யில் வறுத்து சாப்பிட நீர்க்கடுப்பு, உட்சூடு ஆகியவை குணமாகும். குழந்தைகள் மெலிந்து காணப்பட்டால் மணத்தக்காளியை ரசம் வைத்து அடிக்கடி உணவுடன் சேர்த்து கொடுக்க குழந்தை நல்ல ஊட்டம் பெறும்.

மணத்தக்காளி கீரை இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மணத்தக்காளியை வாரம் இருமுறை அதிக காரம், புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். மணத்தக்காளி கீரையை நன்றாக மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும். சிவப்பு மணத்தக்காளி உடல் சோர்வு, வாய்வு கோளாறை நீக்கும்.

Tags :
|