Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேற நீராவி குளியல் சிகிச்சை

உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேற நீராவி குளியல் சிகிச்சை

By: Nagaraj Thu, 16 June 2022 7:58:49 PM

உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேற நீராவி குளியல் சிகிச்சை

சென்னை: இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். இந்த நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும்.

இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற பலன்கள் உள்ளன. நீர், நெருப்பு, பூமி, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சக்தியை கொண்டு இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நீராவி குளியல் மற்றும் எண்ணெய் குளியலின் நன்மைகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்து ொள்ளுங்கள். இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். இந்த நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும். அதனால் உடல் சோர்வு நீங்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

steam bath,waste,exhaust,noci leaf,dr ,நீராவி குளியல், கழிவுகள்,  வெளியேறி விடும், நொச்சி இலை,  டாக்டர்

அதுமட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து மூட்டு மற்றும் எலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும். நீராவி குளியல் உடல் பருமனை குறைக்க உதவும். உடல் வலியை நீக்கும். இதுதவிர வாதநோய், தோல் வியாதிகள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்க உதவும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்த நோயாளிகள் டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே நீராவி குளியல் சிகிச்சை பெறவேண்டும். கர்ப்பிணிகளும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் டாக்டர் அனுமதி பெற்று இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
முந்தைய காலத்தில், நீராவி குளியல் எடுப்பவரை கயிற்று கட்டிலின் மேல் அமர வைப்பார்கள். அதன்பிறகு போர்வையால் அவரை போர்த்தி விடுவார்கள். அதற்கு முன்பே, ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி, நொச்சி இலையை போட்டு மூடி அதை நன்கு கொதிக்க வைத்து தயார்நிலையில் வைத்திருப்பார்கள். அதன்பிறகு அந்த சட்டியை கயிற்று கட்டிலின் கீழ் வைத்து சட்டியின் மூடியை அகற்றி விடுவார்கள்.

அந்த சட்டியில் இருந்து நீராவி கயிற்று கட்டிலின் வழியே போர்வைக்குள் போகும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து போர்வையை நீக்கினால் போதும். நீராவி குளியல் எடுப்பவருக்கு நன்கு வியர்த்து உடலின் கழிவுகள் வெளியேறி விடும்.

Tags :
|