Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சருமத்தை இளமையோடு வைத்திருக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி!

சருமத்தை இளமையோடு வைத்திருக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி!

By: Monisha Fri, 05 June 2020 4:13:06 PM

சருமத்தை இளமையோடு வைத்திருக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி!

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட், சருமம் இளமை தோற்றத்துடன் இருக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரிக்கு சருமத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.

வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சாலிசிலிக் அமிலமானது முகப்பருக்களை நீக்க உதவுகிறது.

adolescent appearance,strawberries,salicylic acid,adolescent girls,beauty tips ,இளமை தோற்றம்,ஸ்ட்ராபெர்ரி,சாலிசிலிக் அமிலம்,பருவப் பெண்கள்,அழகுக்குறிப்புகள்

ஸ்ட்ராபெர்ரி அனைத்துவிதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத் துளைகளில் அடங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப்படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது.

அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.

சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. மேலும் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும்.

Tags :