Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • .ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முலாம்பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முலாம்பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Sun, 13 Aug 2023 6:44:40 PM

.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முலாம்பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: பழக்கடைகளிலும் சாலையோர கடைகளிலும் தர்பூசணிக்கு அடுத்தபடியாக அதிகம் காணப்படக்கூடிய ஒரு பழம் முலாம்பழம். இதன் மற்றொரு பெயர் கிர்ணி பழம்.

முலாம் பழத்தின் பூர்வீகம் பெர்சியா ஆகும். முலாம் பழ உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக துருக்கி, ஈரான், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. ஏறக்குறைய அனைத்து வகை முலாம் பழ வகைகள் இந்தியாவில் முக்கியமாக பயிரிடப்படுகின்றன.

fruit,health,kirni,nutrients, ,ஆரோக்கியம், ஊட்டச்சத்துக்கள், கிர்ணி, பழம், முலாம் பழத்தில் உள்ள சத்துக்கள்

முலாம் பழத்தில் உள்ள சத்துக்கள் : 100 கிராம் முலாம்பழத்தில் 169 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ, 36.7 மில்லி கிராம் வைட்டமின் சி 0.05 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 2.5 மைக்ரோ கிராம் வைட்டமின் கே யும் உள்ளனகிருணி பழத்தில் லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற மூன்று சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.

அவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.முலாம் பழத்தில் கரோட்டினாய்டுகள், லுடீன், ஜீயாக்சாண்டின் மற்றும் பீட்டா-கிரிப்டோக்சாண்டின் உள்ளிட்ட பல அறியப்படாத ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

Tags :
|
|
|