Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு

By: Nagaraj Mon, 13 Nov 2023 11:23:00 AM

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சென்னை: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அவை குடலின் நுண்ணுயிரியத்திற்கு நல்லது. மேலும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அன்றாட நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகச்சிறந்த நண்பன். இவற்றில் நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். இது உடல் எடை இழப்புக்கும் பக்கபலமாக அமையும்.

sugar beet,blood,fiber,energy,starch ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ரத்தம், நார்ச்சத்து, ஆற்றல், ஸ்டார்ச்

சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்தும். பசி உணர்வு இன்றி வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள முடியும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் உணவுகளை சாப்பிடுவது செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கலாம்.

இதன் மூலம் வயதான தோற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தவிர்க்கப்படுகிறது. மேலும் நாள்பட்ட நோய்களை தடுக்கவும் இது உதவுகிறது. வழக்கமான சர்க்கரைவள்ளிக்கிழங்குடன் ஒப்பிடும்போது ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்குஆன்டி ஆக்சிடென்ட் நன்மைகளை அதிகம் கொண்டிருக்கும்.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்கிற தவறான தகவல் உள்ளது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. இது கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலிருக்கும் ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.

Tags :
|
|
|