Advertisement

உடல் பருமனை, தொப்பையை குறைக்க உதவும் புளிச்சாறு

By: Nagaraj Tue, 17 Jan 2023 10:28:27 AM

உடல் பருமனை, தொப்பையை குறைக்க உதவும் புளிச்சாறு

சென்னை: உடல் பருமன் இன்று ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த பிரச்சனையால் கோடிக்கணக்கான மக்கள் சிரமப்படுகின்றனர்.

சொல்லப்போனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சரியான உணவுப் பழக்கம் இல்லாததும், நீண்ட நேரத்துக்கு உடலை எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் வைத்திருப்பதும்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம்.

உடல் பருமன் என்பது ஒரு நோய் மட்டுமல்ல, இதன் காரணமாக இன்னும் பல ஆபத்தான நோய்களும் உங்களை வந்தடையலாம். ஆகையால் எடையைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

உடல் எடையை குறைக்க இனிப்புகளை தவிர்க்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். ஏனெனில் சர்க்கரை கொழுப்பாக மாறி உடல் எடை வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஆனால், புளிப்பு சுவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? புளிப்பான ஒரு பொருள் கொண்டு வயிறு மற்றும் இடுப்பின் கொழுப்பை குறைப்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

புளியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மட்டுமின்றி, நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், புளி சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

tamarind,weight loss,drink,advice ,புளிச்சாறு, உடல் எடை, குறையும், பானம், ஆலோசனை

புளி சாறு சுவையானது மட்டுமல்லாமல் நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது. லேசான டையூரிடிக் பண்புகள் இதில் உள்ளன. இது உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதன் மூலம் நாம் உட்கொள்ளும் தேவையற்ற ஜங்க் ஃபுட்டின் அளவு குறையும் என்பதால் எடை குறையத் தொடங்குகிறது.

புளி சாறு செரிமானத்திற்கும் சிறந்தது. செரிமான அமைப்பு சரியாக இருந்தால், உடல் எடையை குறைக்க மிகவும் எளிதாக இருக்கும். இதனுடன், இந்த பானத்தின் உதவியால் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கலாம். இது உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க வைக்கும்.

புளி சாறு செய்முறை: இதற்கு, முதலில் புளியை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி, பின் அதன் விதைகளை வெளியே எடுக்கவும். இப்போது 2 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் புளியை கலந்து மேலும் சிறிது நேரம் சூடாக்கவும்.

இப்போது அதை ஒரு கிளாஸில் வடிகட்டியின் உதவியுடன் வடிகட்டி, அது குளிரும் வரை காத்திருக்கவும். பின் இதை குடிக்கவும். நீங்கள் தொடர்ந்து இந்த பானத்தை குடித்து வந்தால், உடல் எடை மெதுவாக குறையத் தொடங்கும். சிலருக்கு புளி ஒவ்வாமையை ஏற்படுத்தும். உடல் சூட்டை கிளப்பும். அவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று இதை பயன்படுத்தவும்.

Tags :
|