Advertisement

மிளகில் இருக்கும் அற்புத மருத்துவ குணம்!

By: Monisha Wed, 02 Dec 2020 12:40:56 PM

மிளகில் இருக்கும் அற்புத மருத்துவ குணம்!

கருப்பு தங்கம் என்று அழைக்கப்படும் மிளகில் அதிகளவில் ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றது. பொதுவாக மழைக் காலத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தும்மல், சளி பிரச்சனை அதிகமாக இருக்கும்.

அப்போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சினை சரியாகும்.

வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும்.

pepper,health,sneezing,colds,digestion ,மிளகு,ஆரோக்கியம்,தும்மல்,சளி,செரிமானம்

மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரைக் குடித்து வந்தால் கபம் சரி ஆகும். தொண்டைக் கட்டு, பல் வலி போன்ற பிரச்சினை அதிகமாக இருந்தால், மிளகுத்தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வாய்க் கொப்புளித்து வந்தால் நல்ல தீர்வு காண முடியும்.

ஈரல் நோய் எனப்படும் வைரல் ஹெப்படைடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்துப் பொடி செய்து கொண்டு, காலை, மாலை என இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

Tags :
|
|
|