Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆண்களின் மூளையை விட தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படும் பெண்களின் மூளை

ஆண்களின் மூளையை விட தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படும் பெண்களின் மூளை

By: Karunakaran Tue, 03 Nov 2020 2:05:12 PM

ஆண்களின் மூளையை விட தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படும் பெண்களின் மூளை

மறதி நோயான அல்சமீர் நோய் தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43 ஆயிரத்து 34 பேரிடம் ஆய்வு நடத்தினர். அப்போது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

சுறுசுறுப்பு, ஒரு விஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப் படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில், ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.

brain,women,men,more active ,மூளை, பெண்கள், ஆண்கள்,சுறுசுறுப்பு

பெண்களின் முன் பக்க மூளை பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, பச்சாதாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுய கட்டுப்பாடு ஆகிய வற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர். அதேபோன்று பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின் போது மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு சாப்பிடுவதில் சீரற்ற தன்மை, கவலை எழுதல் போன்றவற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

மொத்தத்தில் ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் இயங்குகிறது என ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|
|
|