Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும் மாற்றங்கள்

பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும் மாற்றங்கள்

By: Karunakaran Tue, 01 Sept 2020 7:54:16 PM

பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும் மாற்றங்கள்

கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்களுக்கான காலமாக அடுத்த பத்தாண்டுகள் இருக்கும்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய எந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டு விடுவார்கள். மனிதர்கள் காட்டுவதை போன்ற அன்பு, கருணை, கோபம், மகிழ்ச்சி போன்றவைகளை ரோபோட்டுகளும் வெளிப்படுத்தி, மனிதர்களோடு கலந்து மனிதர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருப்பார்கள். உணர்ச்சிவசப்பட்டு எதிர்மறையான முடிவுகளை எடுக்காமல், மனிதர்களைவிட திறமை கொண்டதாகவும் அந்த எந்திரங்கள் இருக்கலாம். நான் ஒரு எந்திர மனிதனை திருமணம் செய்துகொண்டால் நிம்மதியாக வாழ்வேன் என்று கூட சொல்லும் நிலை பத்தாண்டுகளில் உருவாகலாம்.

changes,coming decade,world,women ,மாற்றங்கள், வரும் தசாப்தம், உலகம், பெண்கள்

சமையல்வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் சேர்த்து செய்யும் பெண்களை 2030-ல் பார்ப்பது ஓரளவு சிரமமானதாக இருக்கலாம். குடும்பத்தலைவிகளையும் வீட்டையும் நவீன தொழில்நுட்பத்தால் இணைத்துவிடுவார்கள். பெண்கள் அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் வழியாக வீட்டையும், சமையல் அறையையும் இயக்கிக்கொண்டிருப்பார்கள். பெண்களுக்கு அடுத்த பத்தாண்டுகளில் தங்களுடைய உடல் மீது அதிக விழிப்புணர்வு தோன்றும்.

குழந்தைகளுக்காக ‘ஸ்மார்ட் சாக்ஸ்’ உருவாக்கப்பட்டுவிடும். அடுத்த பத்தாண்டுகளில் ‘ஸ்மார்ட் பிரா’ உருவாக்கப்பட்டுவிடும். அது அணிந்திருக்கும் பெண்ணின் இதய துடிப்பு, உடல் இயக்கம், உடல் ஆரோக்கியம், சுவாச கட்டமைப்புகளின் செயல்பாடு போன்ற அனைத்தையும் அளவீடு செய்துவிடும். இப்போது பெருமளவு பெண்கள் குழந்தையின்மையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு 2030-க்குள் புதிய விடிவு கிடைத்துவிடும். மெனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் பெண்கள் செயற்கைமுறையில் தாய்மையடைந்து பிரசவிப்பது அதிகரிக்கும். இதுபோன்ற பலவிதமான மாற்றங்கள் 2030-க்குள் நிறையவே நடக்கும்.

Tags :
|