Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மும்பையில் கொரோனா தினசரி பாதிப்பு திரும்பவும்….. ஆயிரத்தை ஏட்டியது

மும்பையில் கொரோனா தினசரி பாதிப்பு திரும்பவும்….. ஆயிரத்தை ஏட்டியது

By: vaithegi Wed, 08 June 2022 10:04:55 PM

மும்பையில் கொரோனா தினசரி பாதிப்பு திரும்பவும்…..  ஆயிரத்தை ஏட்டியது

புதுடெல்லி: நவி மும்பை, புனே உள்ளிட்ட இடங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் கொரோனா ஆயிரத்தை தாண்டியாதால். இதனால் இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் இன்று 5 ஆயிரத்தை ஏட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளது. கடந்த மார்ச் 6-ந்தேதி பாதிப்பு 5,476 இருந்த நிலையில் தற்போது அதன்பிறகு 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

mumbai,pune,corona,83 per cent ,மும்பை, புனே. கொரோனா. 83 சதவீதம்

மகாராஷ்டிராவில் புதிதாக 1,881 பேர், மும்பையில் 1,242 பேர், கேரளாவில் புதிதாக 1,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் நேற்று முன்தினம் 676 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 83 சதவீதம் உயர்ந்துள்ளது. டெல்லியில் 450, கர்நாடகாவில் 348, அரியானாவில் 227, தமிழ்நாட்டில் 144, உத்தரபிரதேசத்தில் 127 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 3,345 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பினர். தற்போது 28,857 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags :
|
|
|