Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆரோக்கியத்துக்கும் நாம் சாப்பிடும் உணவு தான் பொறுப்பு

ஆரோக்கியத்துக்கும் நாம் சாப்பிடும் உணவு தான் பொறுப்பு

By: Nagaraj Mon, 10 Apr 2023 11:50:48 PM

ஆரோக்கியத்துக்கும் நாம் சாப்பிடும் உணவு தான் பொறுப்பு

சென்னை: நாம் தினமும் சாப்பிடும் உணவு நமக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கவேண்டும். நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்துக்கும் நாம் சாப்பிடும் உணவு தான் பொறுப்பு .

அதன் செயல்பாடுகள் சீராக இருக்க, தக்க சமயத்தில் தேவையான ஆற்றலை வழங்கி நம்மை நலமோடு வாழ இது உதவும். தவிர ஒரு உணவுப்பொருளின் வடிவம் எந்த உறுப்புக்கு உகந்ததோ அந்த வடிவத்தில் இருக்கும்.

அப்படி எந்த உணவுவகைகள் சாப்பிட்டால் உடலிலுள்ள எந்த உறுப்புக்கு, ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதைதெரிந்து கொள்வோம்.

food,health,doctor,broccoli,tomatoes ,உணவு, ஆரோக்கியம், மருத்துவர், ப்ரோக்கோலி, தக்காளி

பாலில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளையும் தினசரி சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலுபெறும்.

தக்காளி: தக்காளிகளில் உள்ள லைக்கோபீன் ஒரு சிறந்த ஆண்டிஆக்சிடண்ட் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்புசக்திகள் உண்டாக்கும் தன்மை கொண்டது. தக்காளிகள் இதயத்திற்கு நல்லது.

ப்ராக்கோலி: இதிலுள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பி 6, நாற்ச்சத்து நுறையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சிலருக்கு இதனை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படும் என்பதால் மருத்துவரை அணுகி உட்கொள்வது சிறந்தது.

Tags :
|
|
|