Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லிச்சிப்பழம் அளிக்கும் ஆரோக்கியம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லிச்சிப்பழம் அளிக்கும் ஆரோக்கியம்

By: Nagaraj Tue, 07 June 2022 5:57:41 PM

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லிச்சிப்பழம் அளிக்கும் ஆரோக்கியம்

சென்னை: குளு குளு லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என தெரியுங்களா.

லிச்சி பழம் கோடைகால சரும பிரச்சினைகள் முதல் எடை இழப்பு வரை பெரிய பங்கு அளிக்கிறது. லிச்சி பழத்தில் நிறைய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது. கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் இதில் காணப்படுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே ரத்த சோகையை போக்க உதவி செய்யும். சருமத்தை அழகாக்கும் சக்தி லிச்சிக்கு உண்டு. மேலும் கோடை காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி சிறந்த மருந்தாகிறது.

lychee fruit,important role,skin care,infections ,லிச்சி பழம், முக்கிய பங்கு, சரும பராமரிப்பு, நோய் தொற்றுகள்

உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது. உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சோர்வில் இருந்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. ஈ.கோலி நோய்த்தொற்றுகள் போன்ற பல கோடை நோய்களுக்கு சிகிச்சையளிக்க லிச்சி பழச்சாறு உதவுகிறது.

இது நமது சரும பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதே மாதிரி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை தடுக்க லிச்சி பழம் உதவுகிறது.

Tags :