Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தொடை இடுக்குகளில் உள்ள கருமையை போக்கும் இயற்கை வழிமுறை

தொடை இடுக்குகளில் உள்ள கருமையை போக்கும் இயற்கை வழிமுறை

By: Nagaraj Wed, 09 Dec 2020 1:54:48 PM

தொடை இடுக்குகளில் உள்ள கருமையை போக்கும் இயற்கை வழிமுறை

ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும்.

இதை போக்குவதற்கு எளிய வழிமுறைகள் உங்களுக்காக... ஒரு கிண்ணத்தில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து, பஞ்சால் நனைத்து தொடையில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி விடவும். வாரம் 3-4 முறை இப்படி செய்யலாம்.

thigh,dark,lemon juice,olive oil ,தொடை, கருமை, எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில்

கற்றாழையின் தோலை நீக்கி, சதைப்பகுதியை நன்கு பேஸ்டாக்கி, அதை தொடைப் பகுதியில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் செய்வது மூலம் கருமை நீங்கி சருமம் மிருதுவாகும்.

ஆரஞ்சு தோலை சேகரித்து வைத்து, அதை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை எடுத்து, சிறிதளவு தேனுடன் கலந்து தொடையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரம் 2-3 முறையாவது இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.

இதேபோல் பாதம் எண்ணெய், ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்யலாம். தக்காளி அரைத்து அதன் விழுதைத் தடவி மசாஜ் செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சில நாட்களில் கருமை மறையத் தொடங்கும்.

Tags :
|
|